/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுவனை தாக்கிய நான்கு பேருக்கு வலை
/
சிறுவனை தாக்கிய நான்கு பேருக்கு வலை
ADDED : ஜூலை 17, 2025 02:06 AM
பொதட்டூர்பேட்டை:சிறுவனை தாக்கிய வாலிபர் உட்பட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பொதட்டூர்பேட்டை கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன், அவரது நண்பருடன் நேற்று பொம்மராஜபேட்டையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
வாணிவிலாசபுரம் இணைப்பு சாலை அருகே வந்து கொண்டிருந்த போது, வாணிவிலாசபுரம் காலனியை சேர்ந்த மதன், 20, மற்றும் அவரது நண்பர்களான மூன்று சிறுவர்களும் இணைந்து, பொதட்டூர்பேட்டையை சேர்ந்த சிறுவனை பிடித்து தகராறு செய்தனர்.
தொடர்ந்து கட்டையாலும், கத்தியாலும் சிறுவனை தாக்கி விட்டு ஓடினர். படுகாயம் அடைந்த சிறுவனை அப்பகுதி மக்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.