தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வடமாநில தொழிலாளியை தாக்கிய நான்கு பேர் கைது

 வடமாநில தொழிலாளியை தாக்கிய நான்கு பேர் கைது

 வடமாநில தொழிலாளியை தாக்கிய நான்கு பேர் கைது


ADDED : ஜன 06, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் காய்கறி கடையில் வே லை பார்க்கும் வடமாநில தொழிலாளியை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கும் மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையோரம் பிரித்வி நகர் பகுதியில், கவரைப்பேட்டையை சேர்ந்த மஸ்தான்பாபு, 45, என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். அங்கு, பீஹார் மாநிலத்தை சேர்ந்த அசார், 25, என்பவர் ஆறு மாதமாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று காலை, கும்மிடிப்பூண்டி அடுத்த கம்மார்பாளையம் கிராமத்தை சேர்ந்த பிரசாந்த், 24, அவரது சகோதரர் நேதாஜி, 27, தம்புரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த சரவணன், 50, ராகவரெட்டிமேடு கிராமத்தை சேர்ந்த சுரேஷ், 47, ஆகியோர் காய்கறி கடையில் காய்கறிகளை வாங்கினர்.

கொத்தமல்லி, கறிவேப்பிலை கேட்டனர். இன்னும் வரவில்லை, சிறிது நேரம் கழித்து வந்தால் தருவதாக கடையில் இருந்த அசார் தெரிவித்துள்ளார். கோபம் அடைந்த பிரசாந்த், அசாரை பலமாக தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த கேமரா பதிவுகள், சமூக வலைதளங்களில் பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், வடமாநில தொழிலாளியை தாக்கிய நான்கு பேரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us