ADDED : ஜூன் 13, 2026 05:06 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, பொதுமக்களுக்கு இடையூறாக, சாலையில் மது அருந்தி ரகளையில் ஈடுபட்ட நால்வரை, போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியில், நேற்று முன்தினம் மாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையோரம் மது அருந்தி விட்டு, பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன், 28, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், சிறுவானுார் கண்டிகை பகுதியில், மது அருந்தி விட்டு, பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட சுரேஷ், 40, என்பவரையும், புல்லரம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமத்துவபுரம் பகுதியில், மது போதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட உளுந்தை உசேன் நகரம் பகுதியைச் சேரந்த் சுரேஷ், 41, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சேர்ந்த ராஜா, 41, ஆகிய இருவரையும், மப்பேடு போலீசார் கைது செய்தனர்.
