/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முன்விரோதத்தில் ரவுடி கொலை எண்ணுாரில் நான்கு பேர் கைது
/
முன்விரோதத்தில் ரவுடி கொலை எண்ணுாரில் நான்கு பேர் கைது
முன்விரோதத்தில் ரவுடி கொலை எண்ணுாரில் நான்கு பேர் கைது
முன்விரோதத்தில் ரவுடி கொலை எண்ணுாரில் நான்கு பேர் கைது
ADDED : நவ 25, 2024 02:41 AM

எண்ணுார்:முன்விரோதம் காரணமாக, எண்ணுாரில் ரவுடியை கத்தியால் குத்திக் கொன்ற நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.
எண்ணுார், அன்னை சிவகாமி நகர், 8வது தெருவைச் சேர்ந்த பாலா என்ற யுவராஜ், 25; பிரபல ரவுடி. இவர் மீது, இரண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை வழக்கு ஒன்றில், செப்., 9ல் எண்ணுார் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
பத்து நாட்களுக்கு பின் ஜாமினில் வந்த இவர், ஆந்திராவில் தங்கி பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, எண்ணுாரில் உள்ள வீட்டிற்கு தன் நண்பர் தியாகராஜன் என்பவருடன் வந்துள்ளார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் உள்ளிட்ட நான்கு பேர், அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நண்பருடன் சென்ற யுவராஜ், அவர்களிடம் தகராறு செய்ததோடு, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து, அவர்களை குத்த முயன்றுள்ளார்.
சுதாரித்த நான்கு பேரும் கத்தியை பிடுங்கி, யுவராஜ், அவரது நண்பர் தியாகராஜனை சரமாரியாக குத்தினர். யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கால், முதுகில் வெட்டுக்காயம் ஏற்பட்ட தியாகராஜன், சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எண்ணுார் போலீசார் வழக்கு பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த, சஞ்சய், 24, சூர்யா, 25, ஈஸ்வர பாண்டியன், 24, விஜயகுமார், 23, ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
உயிரிழந்த யுவராஜ், சில மாதங்களுக்கு முன், மது அருந்த பணம் கேட்டு, சஞ்சய் மற்றும் அவரது நண்பர்களிடம் தகராறு செய்துள்ளார். இதை, யுவராஜின் பெற்றோரிடம் கூறி, சஞ்சய் தகராறு செய்துள்ளனர்.
இதையறிந்த யுவராஜ், ஆந்திரவில் இருந்து வந்து, சஞ்சய் கும்பலை தட்டிக் கேட்டுள்ளார். கத்தியை எடுத்து அவர்களை குத்த முயன்றுள்ளார். எதிர்தரப்பினர் சுதாரித்து, யுவராஜை குத்திக் கொன்று விட்டனர். கொலையில் தொடர்புடைய நான்கு பேரையும், ஒரு மணி நேரத்தில் கைது செய்துள்ளோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.