/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வழிப்பறியில் ஈடுபட்ட நால்வர் கைது
/
வழிப்பறியில் ஈடுபட்ட நால்வர் கைது
ADDED : அக் 14, 2024 06:12 AM
திருப்போரூர் : கேளம்பாக்கம் அடுத்த நாவலுாரைச் சேர்ந்தவர் மணி, 40. கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, நாவலுார் மதுக்கடை அருகே, மர்ம நபர்கள் மணியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர்.
இதுகுறித்து, அங்கிருந்தவர்கள் தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அங்கிருந்த நான்கு பேரையும் மடக்கிப்பிடித்து, காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரணையில், வேங்கடமங்கலத்தை சேர்ந்த சோமு, 32, ஒத்திவாக்கத்தை சேர்ந்த சுனில், 20, கேளம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி, 23, மதுரையைச் சேர்ந்த ஆனந்த், 24, என்பதும், இவர்கள் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.