/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நள்ளிரவில் கலாட்டா செய்த ரவுடிகள் நான்கு பேர் கைது
/
நள்ளிரவில் கலாட்டா செய்த ரவுடிகள் நான்கு பேர் கைது
நள்ளிரவில் கலாட்டா செய்த ரவுடிகள் நான்கு பேர் கைது
நள்ளிரவில் கலாட்டா செய்த ரவுடிகள் நான்கு பேர் கைது
ADDED : ஜன 25, 2026 05:07 AM
புளியந்தோப்பு: நள்ளிரவில், மதுபோதையில் கலாட்டா செய்த ரவுடிகள் நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.
புளியந்தோப்பு, அம்பேத்கர் நகர், நான்காவது தெருவில், நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள வீடுகளின் கதவுகளை, மது போதையில் சிலர் எட்டி உதைத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.
புளியந்தோப்பு போலீசார் விசாரணையில், புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன், 20, விஜய், 19, 'விரல்' கார்த்திக், 26, சதீஷ், 32, ஆகிய நான்கு பேர் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.