/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆவடியில் மண் திருட்டு நான்கு லாரிகள் பறிமுதல்
/
ஆவடியில் மண் திருட்டு நான்கு லாரிகள் பறிமுதல்
ADDED : ஜூலை 24, 2025 02:28 AM

ஆவடி:ஆவடியில், சட்டவிரோதமாக மண் திருடிய நான்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆவடி அடுத்த பட்டாபிராமில் கட்டப்பட்ட 'டைடல் பார்க்' தொழில் பூங்கா, கடந்தாண்டு நவம்பர் மாதம் திறக்கப்பட்டது. கட்டுமான பணியின்போது பள்ளம் தோண்டி எடுக்கப்பட்ட சவுடு மண், 'டைடல் பார்க்' பின்புறம் தேக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், உரிய அனுமதி இல்லாமல் லாரியில் 'டைடல் பார்க்' பெயரில் போலி சான்று ஒட்டி, சில நாட்களாக சவுடு மண் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை அறிந்த மக்கள், சமூக ஆர்வலர்கள் வருவாய் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
மேலும், சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட நான்கு டாரஸ் லாரி மற்றும் 'பொக்லைன்' இயந்திரத்தை, நேற்று காலை சிறைபிடித்தனர். லாரி ஓட்டுநர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பிடிபட்ட மூன்று லாரியில் 18 யூனிட் சவுடு மண் இருந்தது. மற்றொரு லாரி காலியாக இருந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த கனிம வளத்துறை உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள், நான்கு லாரி மற்றும் 'பொக்லைன்' இயந்திரத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.