தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/குரூப் – 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

குரூப் – 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

குரூப் – 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு


UPDATED : அக் 14, 2026 08:50 PM

ADDED : அக் 14, 2026 08:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 08:50 PM ADDED : அக் 14, 2026 08:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் குரூப் – 4 தேர்வுக்காக, கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக, திருவள்ளூர் கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும், குரூப் – 4 தேர்வில், 6,574 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு, வரும் ஜன., 10ம் தேதி நடைபெற உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், குரூப் – 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, எழுத்துத் தேர்வுக்காக கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள், வரும் 21ம் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தொடங்கப்படவுள்ளன.

பயிற்சி வகுப்புகள், சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையும், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, வார நாட்களில் நடைபெறும்.

அலகுவாரியான இலவச மாதிரித் தேர்வுகளும், மாநில அளவிலான முழு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.

இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், 21ம் தேதிக்குள் நேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் தகவல் பெற, 94862 53826, 76397 56839 ஆகிய மொபைல் போன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us