தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ எஸ்.ஐ., தேர்வுக்கு இலவச பயிற்சி

எஸ்.ஐ., தேர்வுக்கு இலவச பயிற்சி

எஸ்.ஐ., தேர்வுக்கு இலவச பயிற்சி


ADDED : ஏப் 24, 2025 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2025 03:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், எஸ்.ஐ., போட்டித்தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்பு நாளை மறுநாள் துவங்குகிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால், 1,299 சார்பு ஆய்வாளர் காலி பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுஉள்ளது.

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, நாளை மறுநாள் முதல் துவக்கப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 - மாலை 4:00 மணி வரை நடைபெறும்.

சிறந்த பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி நடத்தப்படுவதுடன், இலவச மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளோர், 96264 56509, 63815 52624 என்ற மொபைல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us