ADDED : ஆக 31, 2025 09:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:தொம்பரம்பேட்டில் சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாளை ஒட்டி, இலவச கண் சிகிச்சை மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஊத்துக்கோட்டை அடுத்த தொம்பரம்பேடு கிராமத்தில், சாய்பாபா அறக்கட்டளை சார்பில், 1.50 லட்சம் ரூபாயில் குளியல் அறை, கழிப்பறை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அங்குள்ள, 100 வீடுகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும், அங்கு நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அவர்களில், கண் கண்ணாடி தேவைப்படுவோருக்கு, இலவசமாக கண்ணாடி வழங்கப்படும் என, அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.