/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் கடும் அவஸ்தை
/
திருத்தணியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் கடும் அவஸ்தை
திருத்தணியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் கடும் அவஸ்தை
திருத்தணியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் கடும் அவஸ்தை
ADDED : ஏப் 29, 2025 11:37 PM
திருத்தணி, திருத்தணி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும், பகல் நேரத்தில் கொளுத்தும் வெயில் மற்றும் அனல் காற்றால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியே செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர்.
திருத்தணி நகரத்தில், 15 நாட்களாக தொடர்ந்து, 100 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. அதேபோல், கிராமங்களில் நண்பகல், 11:00 - மாலை 5:00 மணி வரை விவசாய பணிகளை தவிர்த்து வீட்டிலேயே இருக்கின்றனர்.
வீடுகளில் இருந்தாலும் மின்விசிறியின் காற்றும் அனல் வீசுவதால், முதியவர்கள், குழந்தைகள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், திருத்தணி நகரம் மற்றும் கிராமங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது.
சில நேரம் மின்தடை ஏற்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் வினியோகம் தடைபடுவதால், மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, சீரான மின் வினியோகம் வழங்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

