/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பேருந்து மோதி பழ வியாபாரி பலி
/
அரசு பேருந்து மோதி பழ வியாபாரி பலி
ADDED : ஆக 11, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே மங்காவரம் கிராமத்தில் வசித்தவர் டில்லி, 39. பழ வியாபாரி. நேற்று முன்தினம் இரவு, கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள இ.சி.எல்., தொழிற்சாலை எதிரே, டூ-வீலரில் சென்ற போது பெட்ரோல் இல்லாமல் நின்றது.
எதிரே உள்ள பங்கில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற தமிழக அரசு பேருந்து அவர் மீது மோதியது. பலத்த காயங்களுடன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.