தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அடையாளம் தெரியாத நபர் துாக்கிட்டு தற்கொலை

அடையாளம் தெரியாத நபர் துாக்கிட்டு தற்கொலை

அடையாளம் தெரியாத நபர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : செப் 27, 2026 09:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 09:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி, செப். 28–

கும்மிடிப்பூண்டி அருகே, அடையாளம் தெரியாத வடமாநில நபர், வயல் வெளியில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கும்மிடிப்பூண்டி அருகே அயநல்லுார் கிராமத்தில், வயல் வெளியில் உள்ள மரம் ஒன்றில், 45 வயது மதிக்கத்தக்க நபர், நேற்று துாக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்தார்.

அதை கண்ட கிராம மக்கள், கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நபரின் வலது கையில் ஹிந்தி எழுத்துக்களில் பச்சை குத்தப்பட்டு இருந்தது. அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதை உறுதிசெய்த போலீசார், அவர் யார், எப்படி அங்கு வந்தார், எதற்காக துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us