/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவேங்கிடபுரத்தில் மொபைல் போன் வெளிச்சத்தில் இறுதி சடங்கு
/
திருவேங்கிடபுரத்தில் மொபைல் போன் வெளிச்சத்தில் இறுதி சடங்கு
திருவேங்கிடபுரத்தில் மொபைல் போன் வெளிச்சத்தில் இறுதி சடங்கு
திருவேங்கிடபுரத்தில் மொபைல் போன் வெளிச்சத்தில் இறுதி சடங்கு
ADDED : ஜன 22, 2026 06:44 AM

பொன்னேரி: திருவேங்கிடபுரம் சுடுகாட்டில் மின்விளக்கு வசதியில்லாததால், இரவு நேரங்களில் இறுதி சடங்குகளை செய்ய செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி, மொபைல்போன் வெளிச்சத்தை பயன்படுத்தும் அவலநிலை உள்ளது.
கடும் சிரமம் மீஞ்சூர் ஒன்றியம் தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, திருவேங்கிடபுரம் சுடுகாடு பகுதி முழுதும் மின்விளக்கு வசதி இல்லை.
இரவு நேரங்களில், இறந்தவர்களின் சடலங்களுடன் அங்கு சென்று, இறுதி சடங்குளை மேற்கொள்ளும்போது, அப் பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
உறவினர்கள், நண்பர்கள் கையில் வைத்திருக்கும் மொபைல்போன் வெளிச்சம் மற்றும் வாகனங்களை இயக்கி, 'ஹெட்லைட்' வெளிச்சம் ஆகியவற்றை பயன்படுத்தும் அவலநிலை உள்ளது.இருட்டில் இறுதிசடங்குகளை சரிவர மேற்கொள்ள முடியாமலும் அவதிப்படுகின்றனர்.
நடவடிக்கை மேலும், விஷ ஜந்துக்களை எண்ணி அச்சத்திற்கும் ஆளாகின்றனர். எனவே, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம், சுடுகாடு பகுதி முழுதும் மின்விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

