/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் கந்தசஷ்டி விழா விமரிசை
/
பொன்னேரியில் கந்தசஷ்டி விழா விமரிசை
ADDED : நவ 04, 2024 02:08 AM

பொன்னேரி:ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியை மகா கந்தசஷ்டியாக பாவித்து, கந்தசஷ்டி விரதம் இருந்து, முருக பெருமானை வழிபடுகின்றனர்.
நேற்று முன்தினம் கந்தசஷ்டி விழாவின் முதல்நாளில் பொன்னேரி, ஆண்டார்குப்பம், பெரும்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சுப்ரமணிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் தீபஆராதனைகள் நடந்தன. உற்சவ பெருமானுக்கு சிறப்பு தீபஆராதனைகள் நடந்தன.
வரும், 6ம் தேதி வரை தினமும் மாலை, 7:00மணிக்கும், 7ம் தேதி காலை, மாலை இருவேளையும் சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. 8ம் தேதி, மாலை, 7:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.