/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.60 லட்சம் தங்க காசுகள் திருடிய கொள்ளை கும்பல் சிக்கியது ராஜஸ்தான் நகை கடை ஓனர் கைது

ADDED : நவ 28, 2025 03:34 AM
யானைகவுனி: யானைகவுனி நகை பட்டறையில், 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 750 கிராம் தங்க காசுகளை கொள்ளையடித்துச் சென்ற மூவரை, ராஜஸ்தானில் வைத்து, போலீசார் நேற்று கைது செய்தனர்.
பிராட்வே அருகே ஏழுகிணறு, வடக்கு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஸ், 34. இவர், யானைகவுனி, வெங்கட்ராயன் தெருவில் 'லக்கரம் கோல்டு ஸ்மித்' எனும் பெயரில், மூன்று ஆண்டுகளாக நகை பட்டறை நடத்தி வருகிறார்.
இந்த பட்டறைக்கு, இம்மாதம் 24ம் தேதி, தங்க காசு வாங்க வந்த மர்ம நபர்கள், ஜெகதீஸ் முகத்தில் தாக்கி, மயக்க மருந்து அடித்து, 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 750 கிராம் தங்க காசுகள், வெள்ளி காசுகள், தாமிர தகடுகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
யானைகவுனி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், ராஜஸ்தானைச் சேர்ந்த கும்பல் இக்கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து, ராஜஸ்தானில் பதுங்கி இருந்த, வர்தாராம் என்ற வினோத், 33, சர்வான், 19, ஓம்பிரகாஷ், 23, ஆகிய மூவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதில் வினோத் என்பவர், ராஜஸ்தானில், கே.கே., ஜுவல்லர்ஸ் பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
கைது செய்யப்பட்டோரிடம் இருந்து 415 கிராம் தங்க காசுகள், 36 கிராம் வெள்ளி காசுகள், 295 கிராம் தாமிர தகடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அங்குள்ள பாலி மாவட்ட நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைக்கு பின், ரயிலில் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.