/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கஞ்சா பறிமுதல் இருவருக்கு காப்பு
/
கஞ்சா பறிமுதல் இருவருக்கு காப்பு
ADDED : டிச 22, 2024 01:25 AM
கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலத்தில் இருந்து, கும்மிடிப்பூண்டி மார்க்கமாக, காரில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், திட்டமிட்ட குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.
ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்த 'மாருதி ஸ்விப்ட்' கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் பதுக்கி வைத்திருந்த, 10 கிலோ கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
அதை கடத்திய, அம்பத்துார் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் செல்வகுமார், 30, மதுரை, உசிலம்பட்டி சவுந்தரபாண்டியன், 45, ஆகிய இருவரை கைது செய்தனர். ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.