நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, கச்சூர்மேடு பகுதியில் கஞ்சா விற்பதாக மதுவிலக்கு போலீசுக்கு தகவல் கிடைத்தது. பெரியபாளையம் மதுவிலக்கு போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் திரிந்து கொண்டு இருந்தவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசலு, 22 என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.