ADDED : பிப் 16, 2024 07:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்:ராணிபேட்டை மாவட்டம், அரக்கோணம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட துலுக்காணத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன், 39.
இவர் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி., கிரண் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
சீனிவாசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.
இதையடுத்து அவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.