ADDED : அக் 03, 2024 07:32 PM
அ நிறம் | அளவு
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம், பூனிமாங்காடு கூட்டுச்சாலையில், கனகம்மாசத்திரம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த 'ஸ்பிளன்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை நிறுத்தினர்.
இதில், இரண்டு பேர் தப்பியோடினர். ஒருவரை மட்டும் பிடித்து சோதனை செய்ததில், அவரின் பாக்கெட்டில், 300 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது.
விசாரணையில், திருவாண்ணமலை பகுதியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ், 24, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.
