UPDATED : ஜூலை 07, 2026 10:24 PM
ADDED : ஜூலை 07, 2026 10:11 PM
அ நிறம் | அளவு
திருத்தணி:திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச்சாவடியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து, திருத்தணி நோக்கி வந்த தனியார் பேருந்தை, போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது, பேருந்தில் இருந்து அவசரம், அவசரமாக இறங்கிய நபரை, சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்ததில், 250 கிராம் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.
விசாரணையில், கஞ்சா கடத்தி வந்தவர், மத்துார் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 30, என தெரிய வந்தது. தொடர்ந்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.
