தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கஞ்சா கடத்தியவர் சிக்கினார்

கஞ்சா கடத்தியவர் சிக்கினார்

கஞ்சா கடத்தியவர் சிக்கினார்


ADDED : செப் 13, 2026 08:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 08:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி, செப். 14–

ஒடிசாவில் இருந்து, 6 கிலோ கஞ்சா கடத்திய நபரை, போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாடியில், போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆந்திர மாநில அரசு பேருந்தை நிறுத்தி, பயணியரின் உடைமைகளை போலீசார் சோதனையிட்டனர்.

அதில் பயணித்த நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் விஜய், 36, என்பவரிடம், 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அவர், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us