/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருமழிசையில் குப்பை எரிப்பு மர்மநபர்கள் அட்டூழியம்
/
திருமழிசையில் குப்பை எரிப்பு மர்மநபர்கள் அட்டூழியம்
திருமழிசையில் குப்பை எரிப்பு மர்மநபர்கள் அட்டூழியம்
திருமழிசையில் குப்பை எரிப்பு மர்மநபர்கள் அட்டூழியம்
ADDED : நவ 20, 2024 01:48 AM

திருவள்ளூர்:திருமழிசை தொழிற்பேட்டையில், 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த ஒலிம்பியா மிதிலா நகர் உட்பட பல நகர்களில், 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலை அருகே காலியிடங்களில், இரவு நேரங்களில் குப்பையை கொட்டி தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் புகையால் சுற்றியுள்ள நகர்களில் வசித்து வரும் பகுதிவாசிகள், சுவாசக் கோளாறால் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தொழிற்பேட்டையில் ஆய்வு செய்து, இரவு நேரங்களில் குப்பை எரிப்பதை தடுக்க வேண்டுமென, திருமழிசை பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.