தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு

சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு

சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு


ADDED : ஆக 24, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடம்பத்துார்: கடம்பத்துார் அருகே, நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டி எரிக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியம், புதுமாவிலங்கை ஊராட்சிக்குட்பட்டது அகரம். இப்பகுதியில் உள்ள திருப்பாச்சூர் – கொண்டஞ்சேரி நெடுஞ்சாலை வழியே, தினமும் 20,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இங்கு, துாய்மை பணியாளர்கள் குப்பையை முறையாக அகற்றாமல், நெடுஞ்சாலையோரம் கொட்டி தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால் ஏற்படும் புகையால், வாகனங்களில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள், நெடுஞ்சாலையோரம் குப்பையை தீயிட்டு எரிப்பதை தடுத்து, குப்பையை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us