/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி அருகே குப்பை அகற்றம்
/
அரசு பள்ளி அருகே குப்பை அகற்றம்
ADDED : ஜன 11, 2024 01:02 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாள நகர் பகுதியில் அமைந்துள்ளது. கே.இ.நடேசன் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி.
இப்பள்ளியில் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 1,300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் ௨ வரை படித்து வருகின்றனர்.
இப்பள்ளி நுழைவாயில் அருகே, குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையில் குப்பை நிறைந்து காணப்பட்டது. இதனால், ஏற்பட்ட துர்நாற்றத்தால் மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.
செய்தியின் எதிரொலியாக, ஊராட்சி நிர்வாகத்தினர் குப்பையை அகற்றி பிளீச்சிங் பவுடர் துாவும் பணியை மேற்கொண்டனர்.
ஆர்.கே.பேட்டை
ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், ஆதிவராகபுரம் கூட்டுச்சாலை பகுதியில், பில்லாஞ்சி ஏரிக்கரை அமைந்துள்ளது.
இந்த சாலையோரம் புதர்மண்டிக் கிடந்தது. இதனால், எதிரெதிரே வாகனங்கள் கடக்கும் போது, இருசக்கர வாகனங்கள், மண்சாலையில் பயணிக்க முடியாத நிலை இருந்தது.
இதை பயன்படுத்தி, பல்வேறு தனியார் நிறுவனங்களின் விளம்பர பதாகைகள் அங்கே நடப்பட்டிருந்தன. இதனால், ஆதிவராகபுரம் சாலைக்கு திரும்பும் வாகன ஓட்டிகள், கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, நெடுஞ்சாலை துறையினர் நேற்று ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக, இந்த புதர்களை அகற்றினர். தனியார் நிறுவனங்களின் பெயர் பலகைகளும் அகற்றப்பட்டன.