தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கண்ட இடத்தில் குப்பை கொட்டுறாங்க! ஆற்காடு குப்பத்தில் மக்கள் அவதி

கண்ட இடத்தில் குப்பை கொட்டுறாங்க! ஆற்காடு குப்பத்தில் மக்கள் அவதி

கண்ட இடத்தில் குப்பை கொட்டுறாங்க! ஆற்காடு குப்பத்தில் மக்கள் அவதி


UPDATED : அக் 24, 2026 08:59 PM

ADDED : அக் 24, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 08:59 PM ADDED : அக் 24, 2026 08:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாலங்காடு: ஆற்காடு குப்பம் ஊராட்சியில் பெரும்பாலான குப்பை தொட்டிகள் சேதமடைந்துள்ளதுடன் குப்பையை கண்ட இடத்தில் வீசி செல்வதால் சுகாதார பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், புதிதாக குப்பை தொட்டி வைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடு குப்பம் ஊராட்சியில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பையை, ஊராட்சியின் துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். மேலும், ஊராட்சியின் முக்கிய இடங்களில் ஆங்காங்கே குப்பை கொட்ட வசதியாக குப்பை தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த குப்பை தொட்டிகளில் பெரும்பாலானவைகள் உடைந்து சேதமடைந்து காணப்படுகின்றன. இதில், கொட்டப்படும் குப்பை பெரும்பாலும் கீழே சிதறி கிடக்கிறது.

திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஊராட்சி நிர்வாகம் மக்கள் நலன் கருதி சேதம் அடைந்த குப்பை தொட்டிகளுக்கு பதில் புதிய தொட்டிகள் அமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us