தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நெடுஞ்சாலையோரம் குப்பைக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி

நெடுஞ்சாலையோரம் குப்பைக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி

நெடுஞ்சாலையோரம் குப்பைக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி


ADDED : செப் 01, 2026 06:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 06:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குத்தம்பாக்கம்: சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பைக்கு துாய்மை பணியாளர்களே தீ வைக்கின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னை – பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில், தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையில், திருமழிசை அடுத்துள்ளது குத்தம்பாக்கம் ஊராட்சியில், புதிதாக கட்டப்பட்டுள்ள அண்ணா பேருந்து நிலையம் அருகே, நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டப்பட்டு குவிக்கப்பட்டு வருகிறது. குப்பையை முறையாக அகற்ற வேண்டிய துாய்மை பணியாளர்களே, அப்பகுதியில் தீ வைத்து எரித்து வருகின்றனர்.

இதனால் ஏற்படும் புகையால், இவ்வழியே வாகனங்களில் செல்வோர் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்டவற்றால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் வருவோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டுவது மற்றும் எரிப்பதை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us