ADDED : ஜன 29, 2024 06:41 AM

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை - - திருவள்ளூர் நெடுஞ்சாலையில், 5 கி.மீட்டர் தொலைவில் இடதுபுறம் செல்லும் இணைப்பு சாலை வழியில் உள்ளது போந்தவாக்கம் ஊராட்சி. இங்கு, 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம், மலர்கள், வாழை பயிரிடுவது மற்றும் கூலி வேலைக்குச் செல்வது.
இங்குள்ள மக்கள் தங்களின் அத்தியாசியப் பொருட்கள் வாங்க, ஊத்துக்கோட்டை செல்ல வேண்டும். இவ்வாறு செல்பவர்கள் மெயின் சாலைக்கு சென்று அங்கிருந்து பஸ் மூலம் செல்கின்றனர்.
பஸ்சிற்கு நிற்கும் பயணியர் வெயில், மழையில் இருந்து காத்துக்கொள்ள ஊராட்சி நிர்வாகம் மூலம் பஸ் நிறுத்தம் கட்டப்பட்டது.முறையான பராமரிப்பின்மையால் பஸ் நிறுத்தம் முழுதும் விளம்பர போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
சில நேரங்களில் இந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு, குப்பையாக குவிந்து இருக்கிறது.
எனவே, ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, போந்தவாக்கம் பஸ் நிறுத்தத்தை சீர்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.