ADDED : அக் 17, 2026 10:05 PM
அ நிறம் | அளவு
திருத்தணி: காஸ் சிலிண்டர் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி அடுத்த மாம்பாக்கம் சத்திரம் கிராமத்தில், நேற்று காலை குருவய்யா என்பவர் தனது வீட்டின் முன் காலி சிலிண்டர் வைத்திருந்த போது, மர்ம நபர் ஒருவர் சிலிண்டரை திருட முயன்றார்.
அப்போது கிராம மக்கள் மர்ம நபரை பிடித்து திருத்தணி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பெரியநாகபூண்டி கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார், 34 என தெரிய வந்தது. அவர் மாம்பாக்கசத்திரம் கிராமத்தில் அடிக்கடி காலி சிலிண்டர்கள் திருடிச் சென்றதையும் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து உதயகுமாரை கைது செய்தனர்.
★★
