/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு வெள்ளி கிரீடம் காணிக்கை
/
பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு வெள்ளி கிரீடம் காணிக்கை
பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு வெள்ளி கிரீடம் காணிக்கை
பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு வெள்ளி கிரீடம் காணிக்கை
ADDED : ஜன 03, 2024 09:53 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டையில் இருந்து 1 கி.மீ., துாரத்தில் ஆந்திர மாநிலம், சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது, ஸ்ரீசர்வமங்களா சமேத ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர் கோவில்.
பழமை வாய்ந்த இக்கோவிலில் சிவபெருமான், உலகை காக்க வேண்டி ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில், அன்னை பார்வதி தேவி மடியில் உறங்குவது போன்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரதோஷ விழா கொண்டாட மூல காரணமாக இக்கோவில் விளங்குவது தனிச்சிறப்பு.
பிரதோஷ விழா, சிவராத்திரி, அன்னாபிஷேகம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு விமரிசையாக கொண்டாடப்படும். தமிழகம், ஆந்திரா மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வருவர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன், பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர்.
இதையடுத்து, சேலம் மாவட்டம், செவ்வாப்பேட்டையைச் சேர்ந்த நந்தகோபால் மற்றும் அவரது குடும்பத்தினர் ஸ்ரீசர்வமங்களா தேவிக்கு, 1.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 2.427 கிராம் எடை உள்ள வெள்ளி கிரீடம் மற்றும் காதணிகளை வழங்கினர்.
இதை, கோவில் சேர்மன் முனிசந்திரசேகர் ரெட்டி, செயல் அலுவலர் ராமச்சந்திரா ரெட்டி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.