/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஞானகொல்லிதோப்பு பாலம் கட்டுமான பணி தீவிரம்
/
ஞானகொல்லிதோப்பு பாலம் கட்டுமான பணி தீவிரம்
ADDED : பிப் 05, 2024 05:49 AM

ஆர்.கே.பேட்டை : ஆர்.கே.பேட்டை ஒன்றியம், கொண்டாபுரம் வழியாக பரவத்துார் செல்லும் வழியில், ஞானகொல்லிதோப்பு கிராமத்தை ஒட்டி, ஓடை பாய்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஏரியின் உபரிநீர் இந்த ஓடையில் பாய்கிறது.
இந்த ஓடை, 10க்கும் மேற்பட்ட ஏரிகளின் நீராதாரமாக அமைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஞானகொல்லி தோப்பு ஓடையில் வெள்ளம் கரை புரண்டு பாய்ந்தது. அப்போது, அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, தரைப்பாலத்திற்கு மாற்றாக தற்போது புதியமேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. நெடுஞ்சாலை துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பணி, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பாலம் பணிகள் நிறைவடைந்து, இணைப்பு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
விரைவில், இந்த பாலத்தின் மீதாக போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மார்க்கமாக, ஆர்.கே.பேட்டை மற்றும் திருத்தணியில் இருந்து எளிதாக பரவத்துார், சாலை, மின்னல் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்க முடியும் என்பதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.

