/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜி.என்.டி., சாலையில் உலாவும் கால்நடைகளால் விபத்து அபாயம்
/
ஜி.என்.டி., சாலையில் உலாவும் கால்நடைகளால் விபத்து அபாயம்
ஜி.என்.டி., சாலையில் உலாவும் கால்நடைகளால் விபத்து அபாயம்
ஜி.என்.டி., சாலையில் உலாவும் கால்நடைகளால் விபத்து அபாயம்
ADDED : பிப் 03, 2025 03:52 AM

புழல்:சென்னை - கோல்கட்டா செல்லும் ஜி.என்.டி., சாலையில், புழல் கேம்ப் சிக்னல் அருகே சுற்றித் திரியும் மாடுகளால், அப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாதவரம் மண்டலம், 24வது வார்டுக்குட்பட்ட இப்பகுதியில், வாகனங்களுக்கு இடையே புகுந்து ஓடும் மாடுகளால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் விபத்தில் சிக்குகின்றனர்.
சாலையில் திரியும் மாடுகளை, மாநகராட்சியினரும் கண்டுகொள்வதில்லை. மதிய வேளைகளில், சாலை நடுவே மாடுகள் படுத்துக்கொள்கின்றன.
சில நேரங்களில், கனரக வாகனங்கள், மாடுகளை மோதி விட்டு செல்கின்றன. தலைக்கவசம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தும் போக்குவரத்து காவல் துறை, விபத்துக்கு காரணமான இதுபோன்ற தொல்லையில் இருந்தும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.