/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நடத்துனரின் டிக்கெட் பை 20,000 ரூபாயுடன் 'ஆட்டை'
/
நடத்துனரின் டிக்கெட் பை 20,000 ரூபாயுடன் 'ஆட்டை'
ADDED : பிப் 17, 2024 12:40 AM
கோயம்பேடு:ஓடும் பேருந்தில், 20,000 ஆயிரம் ரூபாயுடன் நடத்துனரின் டிக்கெட் பையை திருடிச் சென்ற மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை, புதுச்சேரி வரை செல்லும் அரசு விரைவு பேருந்து ஒன்று, பயணியருடன் புறப்பட்டுச் சென்றது.
இப்பேருந்து, கோயம்பேடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் அருகே வரும்போது, நடத்துனர் ஜெகதீசன்,40, தன்னுடைய டிக்கெட் பையை காணாமல் தேடியுள்ளார்.
பின், பேருந்து மீண்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு திரும்பியது. அங்கு பயணியர் அனைவரையும் இறக்கி விட்டு, சோதனை செய்தும், பணம் இருந்த டிக்கெட் பை கிடைக்கவில்லை.
இதுகுறித்து, கோயம்பேடு போலீசில் ஜெகதீசன் புகார் அளித்தார். அந்த பையில், 20,000 ரூபாய் மற்றும் 38,000 ரூபாய் மதிப்பிலான பேருந்து டிக்கெட்டுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, பணத்துடன் பையை திருடிய மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.