/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அணுசக்தி துறை வாலிபால் போட்டி கோல்கொண்டா அணி வெற்றி
/
அணுசக்தி துறை வாலிபால் போட்டி கோல்கொண்டா அணி வெற்றி
அணுசக்தி துறை வாலிபால் போட்டி கோல்கொண்டா அணி வெற்றி
அணுசக்தி துறை வாலிபால் போட்டி கோல்கொண்டா அணி வெற்றி
ADDED : பிப் 11, 2024 12:42 AM
கல்பாக்கம்:அணுசக்தி நிறுவனங்கள் அணிகள் இடையே, கல்பாக்கத்தில் நடந்த தேசிய வாலிபால் போட்டியில், கோல்கொண்டா அணி வென்றது.
அணுசக்தி துறையின் சார்பில், 38ம் ஆண்டு வாலிபால் போட்டி, கல்பாக்கம் விளையாட்டு மேம்பாட்டு குழு, 'நெஸ்கோ' கழகம் இணைந்து, கல்பாக்கத்தில் நடத்தியது.
கடந்த 5ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் வரை நடந்தது. இதில், எட்டு மண்டல அணிகள், 12 போட்டிகளில் விளையாடினர்.
ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கிய கோல்கொண்டா அணி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கிய புஷ்கர் அணியுடன் இறுதி போட்டியில் மோதியது.
இந்த விறுவிறுப்பான போட்டியில் கோல்கொண்டா அணி வென்றது.
பரிசளிப்பு விழாவில், சென்னை அணுமின் நிலைய இயக்குனர் சுதிர் பி.ஷெல்கே, வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை, பரிசு உள்ளிட்டவை வழங்கினார். இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய குழும இணை இயக்குனர் பொன்ராஜு, பாவினி அணுமின் நிறுவன கட்டுமான பிரிவு இயக்குனர் ஜெகதீஷ், 'நெஸ்கோ' நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.