/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆர்.கே.பேட்டையில் தங்க நகை திருட்டு
/
ஆர்.கே.பேட்டையில் தங்க நகை திருட்டு
ADDED : டிச 17, 2024 09:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த, ஜி.சி.எஸ்.கண்டிகையைச் சேர்ந்தவர் கணேஷ், 38. இவர், தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இவர், வேலைக்கு சென்றிருந்தார். இவருடைய மனைவி மற்றும் தாயார் வெளியூருக்கு சென்று திரும்பிய போது வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 27 கிராம் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.
இதே போல, ஆர்.கே.பேட்டை அடுத்த, ராமாபுரம் சாலையில் வசிக்கும் தேசம்மாள், 75, என்பவரிடம் வீடு புகுந்து மர்ம நபர்கள், 10 சவரன் செயினை பறித்து சென்றுள்ளனர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.