/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புனிதவெள்ளி சிறப்பு பிரார்த்தனை
/
புனிதவெள்ளி சிறப்பு பிரார்த்தனை
ADDED : ஏப் 18, 2025 09:46 PM
திருத்தணி:புனித வெள்ளி ஒட்டி திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., சர்ச்சில் ஏசுவின் சிலுவைப்பாடு, அவை உணர்த்தும் நற்செய்தி குறித்த ஆராதனை நடத்தப்பட்டது. இதில் சிலுவையில் ஏசு அறையப்பட்ட போது அவர் பேசிய ஏழு வார்த்தைகளை, கிறிஸ்துவர்கள் தியானம் செய்தனர்.
இதேபோல் திருத்தணி - சித்துார் சாலையில் அமைந்துள்ள, தணிகை புதுமை மாதா சர்ச்சில் சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருத்தணி கமலா திரையரங்கம் அருகே தொடங்கிய சிலுவைப்பாடு பேரணி, முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று இறுதியில் சர்ச்சில் நிறைவு பெற்றது. இதில் நுாற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள், பாடல்களை பாடியபடி பங்கேற்றனர். நாளை ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.

