/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலை சீரமைப்பு பணியில் ரூ.5 லட்சம் பொருட்கள் திருட்டு
/
நெடுஞ்சாலை சீரமைப்பு பணியில் ரூ.5 லட்சம் பொருட்கள் திருட்டு
நெடுஞ்சாலை சீரமைப்பு பணியில் ரூ.5 லட்சம் பொருட்கள் திருட்டு
நெடுஞ்சாலை சீரமைப்பு பணியில் ரூ.5 லட்சம் பொருட்கள் திருட்டு
ADDED : ஆக 03, 2025 10:58 PM
புல்லரம்பாக்கம்:திருவள்ளூர் அருகே நடந்து வரும் ஆறுவழி நெடுஞ்சாலை சீரமைப்பு பணியில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான இரும்பு பொருட்கள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன், 40. திருவள்ளூர் அருகே, கல்யாணகுப்பம் பகுதியில், தனியார் நிறுவனம் மேற்கொண்டு வரும் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணியில், திட்ட மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 21ம் தேதி, அப்பகுதிக்கு ஷேர் ஆட்டோவில் வந்த மர்ம கும்பல், அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி, ஆறு துத்தநாகத் தகடு, 13 ஜாக்கி, 288 இரும்பு கம்பி, 175 நட்டு, ஒரு இரும்பு தகடுகளை திருடிச் சென்றது.
இதுகுறித்து புகாரின்படி வழக்கு பதிந்த புல்லரம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருடு போன பொருட்களின் மதிப்பு, ஐந்து லட்சம் ரூபாய் இருக்கும் என, போலீசார் தெரிவித்தனர்.
விசாரணையில், தாமரைப்பாக்கம் அருகே உள்ள மறுமலர்ச்சி நகர் பகுதியை சேர்ந்த ராகவன், 25, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த, 50 இரும்புக் கம்பிகளை மட்டும் மீட்டனர். மேலும், திருட்டில் சம்பந்தப்பட்ட தருமன் என்பவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
விசாரணைக்கு பின், ராகவனை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், கிளை சிறையில் அடைத்தனர்.