/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு கல்லுாரி மாணவர்களுக்கு வலை
/
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு கல்லுாரி மாணவர்களுக்கு வலை
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு கல்லுாரி மாணவர்களுக்கு வலை
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு கல்லுாரி மாணவர்களுக்கு வலை
ADDED : ஜூலை 11, 2025 01:12 AM

திருத்தணி:திருத்தணி அருகே அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடி மீது கல்லுாரி மாணவர்கள் இருவர் கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பி ஓடினர்.
திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து அரசு பேருந்து தடம் எண்:97 என்ற பேருந்து திருத்தணி- திருவள்ளூர்- சென்னை வரை தினமும் இயக்கப்படுகிறது.
நேற்று இப்பேருந்தில் ஓட்டுநராக மோகன், 48, நடத்துநராக அருண்குமார், 32 பணியாற்றினர். மதியம், 1:30 மணிக்கு திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து, 50க்கும் மேற்பட்ட பயணியரை ஏற்றிக் கொண்டு திருவள்ளூர் புறப்பட்டது.
மதியம், 1:50 மணிக்கு திருத்தணி அரசு கலைக் கல்லுாரி பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணியரை இறக்கி விட்டு புறப்பட்டது. அப்போது இரு கல்லுாரி மாணவர்கள் பேருந்தின் பின்பக்க கண்ணாடி மீது கற்களை வீசி விட்டு தப்பிச் சென்றனர். கண்ணாடி உடைந்தது. பயணியர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. திருத்தணி போலீசார், கண்ணாடியை உடைத்த கல்லுாரி மாணவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.