/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நேர அட்டவணை இல்லாததால் இஷ்டத்திற்கு கிளம்பும் அரசு பஸ்கள்
/
நேர அட்டவணை இல்லாததால் இஷ்டத்திற்கு கிளம்பும் அரசு பஸ்கள்
நேர அட்டவணை இல்லாததால் இஷ்டத்திற்கு கிளம்பும் அரசு பஸ்கள்
நேர அட்டவணை இல்லாததால் இஷ்டத்திற்கு கிளம்பும் அரசு பஸ்கள்
ADDED : டிச 17, 2024 12:37 AM

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அரசு பேருந்து பணிமனையில் இருந்து, சென்னை கோயம்பேடு, செங்குன்றம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, ஆந்திர மாநிலம், திருப்பதி, காளஹஸ்தி, நெல்லுார் மற்றும் அண்டை மாநிலமான புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு, 30 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதில், 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன. மீதமுள்ள, 10 பேருந்துகள், மாம்பாக்கம், பிளேஸ்பாளையம், முக்கரம்பாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படுகின்றன.
நேற்று காலை, பேருந்து நிலையத்தில், எந்த பேருந்து முதலில் செங்குன்றம் செல்ல கிளம்பும் என தெரியாமல் பயணியர் அல்லல்பட்டனர். பின், இரண்டு பேருந்துகளும் ஒன்றின் பின் ஒன்றாக சென்றன. பின், ஒரு மணி நேரத்திற்கு செங்குன்றத்திற்கு பேருந்துகள் இல்லை. இங்கு நேர அட்டவணை இல்லாதது குறிப்பிடத்தக்கது.
தினமும் இதுபோன்ற சம்பவங்களால் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
தமிழக சட்டசபை தொகுதியில் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்கோட்டை அரசு பேருந்து பணிமனையில் நடக்கும் அவலங்களை தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

