/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கார் விபத்தில் அரசு டாக்டர் காயம்
/
கார் விபத்தில் அரசு டாக்டர் காயம்
ADDED : ஜன 09, 2025 09:47 PM
திருத்தணி:வேலுார் மாவட்டம், கருகாம்பத்துார் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாரி மார்க்ஸ், 49; அரசு உதவி அறுவை சிகிச்சை நிபுணர். இவர்; திருவள்ளூர் மாவட்டம்; அத்திமாஞ்சேரிபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை, காரில் அலுவலக வேலை காரணமாக, சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்றார். காரை மருத்துவரே ஓட்டிச் சென்றார். அங்கு பணிகள் முடிந்ததும், மதியம் அதே காரில், அத்திமாஞ்சேரிபேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த, வீரகநல்லுார் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் உள்ள புளி மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், மருத்துவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.