/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு மாணவர் விடுதி வார்டன் 'சஸ்பெண்ட்'
/
அரசு மாணவர் விடுதி வார்டன் 'சஸ்பெண்ட்'
ADDED : ஏப் 01, 2025 08:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் அரசு மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி, பள்ளியில் பயின்று வருகின்றனர். இங்கு, வார்டனாக அருண்குமார், 32, என்பவர் உள்ளார்.
இவர், விடுதியில் இருப்பதில்லை என்றும், மாணவர்களை கண்காணிப்பதில்லை என, புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, திருத்தணி வட்ட பிற்படுத்தப்பட்ட நலத்துறை அதிகாரி விசாரித்தார். இந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நேற்று அருண்குமாரை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

