/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி வகுப்பறை கட்டடங்கள் திறப்பு
/
அரசு பள்ளி வகுப்பறை கட்டடங்கள் திறப்பு
ADDED : டிச 23, 2024 11:55 PM
ஊத்துக்கோட்டை,
பூண்டி ஒன்றியம், நெய்வேலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, 84 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
இங்கு, மாணவர்களுக்கு போதுமான இடவசதி இல்லாததால், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் வாயிலாக, 28 லட்சம் ரூபாயில் இரண்டு வகுப்பறைகள் கட்டடம் கட்டப்பட்டது. இதேபோல, அனந்தேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 28 லட்சம் ரூபாயில் இரண்டு புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டன. இரண்டு கட்டடங்களையும் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
பள்ளிகளில் நடந்த விழாவில், கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன், ஒன்றிய செயலர்கள் சந்திரசேகர், பொன்னுசாமி, ஊராட்சி தலைவர் பரமேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.