/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுகாதாரமற்ற சூழலில் குஸ்கா கடை அரசு பள்ளி மாணவர்கள் பாதிப்பு
/
சுகாதாரமற்ற சூழலில் குஸ்கா கடை அரசு பள்ளி மாணவர்கள் பாதிப்பு
சுகாதாரமற்ற சூழலில் குஸ்கா கடை அரசு பள்ளி மாணவர்கள் பாதிப்பு
சுகாதாரமற்ற சூழலில் குஸ்கா கடை அரசு பள்ளி மாணவர்கள் பாதிப்பு
ADDED : ஜூலை 21, 2025 03:33 AM

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி முன், சுகாதாரமற்ற சூழலில் இயங்கி வரும் குஸ்கா கடையால், பள்ளி மாணவர்களின் உடல்நலன் பாதிக்கும் அபாயம் இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கவரைப்பேட்டையில், தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையோரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் நுழைவாயில் அருகே, தள்ளுவண்டியில் குஸ்கா கடை ஒன்று இயங்கி வருகிறது.
பள்ளி துவங்கும் நேரம், மதிய உணவு இடைவேளை நேரங்களில், குஸ்கா கடை முன் புற்றீசல் போல் பள்ளி மாணவர்கள் சூழ்ந்துக் கொள்கின்றனர். மாணவர்களுக்கு என சலுகை விலையில், 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய்க்கு குஸ்கா விற்கப்படுகிறது. சுவை மிகுதியால், மாணவர்களும் ஆர்வமுடன் குஸ்கா வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
அந்த குஸ்கா கடை அருகே, பொது கழிப்பறை மற்றும் திறந்வெளி கழிவுநீர் கால்வாய் உள்ளது.
சுகாதாரமற்ற சூழலில் குஸ்கா கடை இயங்கி வருவதால், ஈ, கொசுக்கள் வாயிலாக மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால், மாணவர்களின் உடல்நலன் பாதிக்கும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, கும்மிடிப்பூண்டி உணவு பாதுகாப்பு துறையினர், கவரைப்பேட்டை மட்டுமின்றி, கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு பள்ளிகள் முன் இயங்கி வரும் குஸ்கா கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.