/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இடிந்து விழும் குடிநீர் தொட்டி அரசு பள்ளி மாணவர்கள் அச்சம்
/
இடிந்து விழும் குடிநீர் தொட்டி அரசு பள்ளி மாணவர்கள் அச்சம்
இடிந்து விழும் குடிநீர் தொட்டி அரசு பள்ளி மாணவர்கள் அச்சம்
இடிந்து விழும் குடிநீர் தொட்டி அரசு பள்ளி மாணவர்கள் அச்சம்
ADDED : அக் 24, 2024 01:07 AM

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் தும்பிக்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளி வளாகத்திலேயே அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சிக்கு குடிநீர் வழங்கும் 30,000 லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி முறையாக பராமரிக்காததால், தற்போது வலுவிழந்து மிகவும் சேதமடைந்துள்ளது.
தொட்டியின் நான்கு தூண்களிலும் சிமென்ட் கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்த நிலையில் வெளியே தெரிகின்றன.
இதனால், குடிநீர் மேல்நிலை தொட்டி, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், மாணவர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படும் அபாய நிலை உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம், இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.