தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அரசு பள்ளி கண்ணாடி உடைப்பு சமூக விரோதிகள் வெறிச்செயல்

 அரசு பள்ளி கண்ணாடி உடைப்பு சமூக விரோதிகள் வெறிச்செயல்

 அரசு பள்ளி கண்ணாடி உடைப்பு சமூக விரோதிகள் வெறிச்செயல்


ADDED : பிப் 19, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 05:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாலங்காடு: பெரியகளக்காட்டூர் ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளியில், சமூக விரோதிகள் கண்ணாடிகளை உடைத்துள்ளதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகளக்காட்டூர் கிராமத்தில், அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.

இப்பள்ளியில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கடந்தாண்டு தாட்கோ நிதியில், 2 கோடி ரூபாயில் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. சில நாட்களாக சமூக விரோதிகள், பள்ளி ஜன்னல் கண்ணாடியை மாலை, இரவு நேரத்தில் உடைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில், பள்ளியின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என, மொத்தம் 7 இடங்களில் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. இதனால், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளிக்கு பாது காப்பு இல்லை என அதிருப்தி தெரிவிக்கின்றனர். எனவே, காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us