/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜி.ஆர்.டி., கல்வியியல் கல்லுாரி துவக்க விழா
/
ஜி.ஆர்.டி., கல்வியியல் கல்லுாரி துவக்க விழா
UPDATED : அக் 09, 2025 11:52 PM
ADDED : அக் 09, 2025 11:46 PM

திருத்தணி:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி ஜி.ஆர்.டி., கல்வியியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரியின், 21வது ஆண்டு துவக்க விழா, கல்வி குழுமத்தின் டீன் ஆறுமுகம் தலைமையில் நடந்தது.
கல்வியியல் கல்லுாரி முதல்வர் ராதிகா வித்யாசாகர் வரவேற்றார். ஜி.ஆர்.டி., கல்வி குழும நிர்வாக அலுவலர் சசிகுமார், தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் வேதநாயகி ஆகியோர் பங்கேற்று, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினர்.
வருங்கால ஆசிரியர்களாக வரவுள்ள மாணவர்களுக்கு, கல்வியின் அவசியம் மற்றும் ஆசிரியரின் பங்களிப்பு குறித்தும், அவர்கள் வலியுறுத்தினர்.
கடந்தாண்டு பி.எட்., - எம்.எட்., தேர்வுகளில், முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், துணை முதல்வர் சுதாகர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.