/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குட்கா பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு 'சீல்'
/
குட்கா பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு 'சீல்'
ADDED : ஜன 24, 2024 10:53 PM

திருத்தணி:திருத்தணியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கலெக்டர் மற்றும் எஸ்.பி., உத்தரவின்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு சுகாதார அலுவலர் முகமது மற்றும் திருத்தணி போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது, மேல்திருத்தணி அமிர்தாபுரம் - சித்துார் சாலையில், ராஜேந்திரன், 54, என்பவரது மளிகை கடையில் சோதனை நடத்தினர்.
இதில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து கடைக்கு, 'சீல்' வைத்தும், 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ராஜேந்திரன் என்பவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.