தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 'குரூப் - 2' போட்டி தேர்வு இலவச பயிற்சி துவக்கம்

'குரூப் - 2' போட்டி தேர்வு இலவச பயிற்சி துவக்கம்

'குரூப் - 2' போட்டி தேர்வு இலவச பயிற்சி துவக்கம்


ADDED : ஜூலை 26, 2025 07:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2025 07:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அரசு நடத்தும் குரூப் - 2 போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை துவங்க உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, டி.என்.பி.எஸ்.சி., - டி.என்.யு.எஸ்.ஆர்.பி., மற்றும் டி.ஆர்.பி., போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சமீபத்தில், அரசு பணியாளர் தேர்வாணையத்தால் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2ஏ காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான பயிற்சி வகுப்பு, நாளை காலை 10:30 மணிக்கு, திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் துவக்கப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்புகளில் இலவச மாதிரி தேர்வு மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளன. மேலும் விபரங்களுக்கு, 84898 66698, 96264 56509 ஆகிய மொபைல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us