/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குரூப் - 2 தேர்வு: 3,883 பேர் 'ஆப்சென்ட்'
/
குரூப் - 2 தேர்வு: 3,883 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : செப் 28, 2025 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்;திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற குரூப் - 2 தேர்வில், 3,883 பேர் தேர்வு எழுதவில்லை.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 2 மற்றும் குரூப் - 2ஏ தேர்வு நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 5 வட்டங்களில் 34 மையங்களில் உள்ள 45 தேர்வு கூடங்களில் நடந்தது.
திருவள்ளூர், ஆவடி, பொன்னேரி, பூந்தமல்லி, திருத்தணி ஆகிய 5 வட்டங்களிலும், 14,278 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று நடந்த தேர்வில், 10,395 பேர் மட்டுமே பங்கேற்றனர். மீதம் உள்ள, 3,883 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு மையத்தை கலெக்டர் பிரதாப் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.