/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குரூப் - 2 முதன்மை தேர்வு நாளை முதல் இலவச பயிற்சி
/
குரூப் - 2 முதன்மை தேர்வு நாளை முதல் இலவச பயிற்சி
ADDED : நவ 10, 2025 11:01 PM
திருவள்ளூர்: அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 2 மற்றும் குரூப் - 2ஏ, முதன்மை தேர்வுக்கு, நாளை முதல் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு பணியாளர் தேர்வாணையத்தால், குரூப் - 2 தேர்வுக்கு 50 இடம், குரூப் - 2ஏ தேர்வுக்கு 595 காலி பணியிடம் நிரப்ப, கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியானது.
இத்தேர்விற்கான முதல்நிலை தேர்வு, கடந்த செப்., 28ம் தேதி நடத்தப்பட்டது.
இந்நிலையில், குரூப் - 2 மற்றும் குரூப் - 2ஏ முதன்மை போட்டி தேர்வு களுக்கான, ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பு, திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை முதல் துவக்கப் படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பு, சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படுவதுடன், இலவச மாதிரி தேர்வுகளும், மாநில அளவிலான முழுமாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன. மேலும், விபரங்களுக்கு 84898 66698, 96264 56509 என்ற மொபைல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

